தமிழக செய்திகள்

மகா காளியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

மேல்வாலை கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா மேல்வாலை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வன காளியம்மன், அக்னிவீரன், ஆத்திலியம்மன், சப்தகன்னிகள், முனீஸ்வரன் ஆகிய சன்னதிகளும் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 4-ம் ஆண்டு மயானக்கொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது.

மயானக்கொள்ளை

இதையொட்டி கத்தி, சூலம், கபாலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயான காளியாய் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் சிலர், அங்காளம்மன், காளி, காத்தவராயன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதில் மேல்வாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மேல்வாலை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்