தமிழக செய்திகள்

அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திரளான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பாடு நடைபெற்றது. இதில் அம்மன் வேடமணிந்த பக்தர்கள் முன்னே செல்ல ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கீழையூரை வந்தடைந்தது. வழிநெடுக பக்தர்கள் அம்மனுக்கு படையல் செய்தனர். தொடர்ந்து அங்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள், பருவத ராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்