தமிழக செய்திகள்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

காரைக்குடி கோட்ட அளவிலான மின்பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது.

காரைக்குடி கோட்ட அளவிலான மின்பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காரைக்குடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடக்கிறது. எனவே காரைக்குடி கோட்டத்தை சேர்ந்த மின்பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.