தமிழக செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டா அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருவாரூர்;

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை உத்தரவிட்டார்.தொடர்ந்து, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதிதிராவிடர் மக்களின் வாரிசுதாரர்களான 3 பேருக்கு ஆதிதிராவிடர் நல விடுதி சமையலர் பணியிட ஆணையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை