தமிழக செய்திகள்

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

சேலம் செவ்வாய்பேட்டையில் குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் நேற்று குகை மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் மோட்டார் சைக்கிளில் 50 கிலோ குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரகுமார் (வயது 32) என்பதும், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரின் கடைக்கு சென்று போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்த 40 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி விற்க முயன்ற மகேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் யாரிடம் இருந்து குட்காவை வாங்கி வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு