தமிழக செய்திகள்

ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1¾ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, வியாழக்கிழமை சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு, சூரியகாந்தி விதை. நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதன்படி வெள்ளிக்கிழமை விவசாயிகள் கலந்து கொண்டு 2ஆயிரத்து 395 கிலோ நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை ரூ.75.80-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1லட்சத்து 81ஆயிரத்து 578-க்கு வணிகம் நடைபெற்றது.

இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

---