சென்னை,
குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-2 பொது அறிவு தேர்வு வரும் 22-ந்தேதி முற்பகல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு எண்.11/2025 நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலை தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், தொகுதி-II பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-2 பொது அறிவு (விரிந்துரைக்கும் வகை) தேர்வானது பிப்ரவரி 22-ந்தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவு தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.