தமிழக செய்திகள்

கண்காணிப்பு குழு கூட்டம்

தர்மபுரியில் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

தினத்தந்தி

தர்மபுரி:

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். கண்காணிப்பு குழு உறுப்பினர் சம்பத்குமார் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் கலெக்டர், குழு உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை