சென்னை,
நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைந்த நினைவு தூணுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் மரியாதை செலுத்தினார்.
அதன்பின் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் மற்றும் முப்படை அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.