தமிழக செய்திகள்

கார் மோதி காவலாளி பலி

கார் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

புதுச்சத்திரம் அருகே ஆலப்பாக்கம் கள்ளுகடை மேட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). தனியார் நிறுவன காவலாளி. இவர் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள கள்ளுகடை மேடு சித்தாறு பாலம் கட்டும் பணியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மகன் விஜயபாலன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது