தமிழக செய்திகள்

ரெயில் மோதி காவலாளி பலி

ஜோலார்பேட்டை அருகே ரெயில் மோதி காவலாளி பலியானார்.

தினத்தந்தி

நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னகூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). வாணியம்பாடி தனியார் மேல்நிலைப்பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு இரண்டு கைகள் மற்றும் கால்கள் துண்டாகி இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்