தமிழக செய்திகள்

சென்னை அடையாறில் தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு

சென்னையில் நீதிபதி வீட்டில் தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழந்து உள்ளார்.

சென்னை,

சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் என்ற காவலர் கடந்த புதன்கிழமை திடீரென துப்பாக்கியால் சுட்டு கொண்டார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், சரவணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் அல்ல என எழுதி வைத்திருந்தார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக சரவணன் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரவணன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...