தமிழக செய்திகள்

குட்கா முறைகேடு வழக்கு: நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் டி.எஸ்.பி. மன்னர்மன்னன் பணியிடை நீக்கம்

குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி. மன்னர்மன்னன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

மதுரை ரெயில்வே காவல்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன்,புழல் காவல் உதவி ஆணையாளராக இருந்த போது, பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டின்படி, தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வேதுறை ஐ.ஜி. சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டுள்ளார்.

டி.எஸ்.பி. மன்னர்மன்னன், நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு