தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறூவனத்திற்குச் சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பழைய டயர்களை மிகப்பெரிய ராட்ச பாய்லர்களில் போட்டு உருக்கி, அதில் இருந்து ஒரு விதமான பவுடர் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப்பொருளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை