தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை–-பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்

திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை நடைபெற்றது.பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோவிலில் 93-வது குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி மாயாண்டி சுவாமியின் ஜீவசமாதிக்கும் கோவிலின் கருவறையில் உள்ள விநாயக பெருமானுக்கும் சகல பூஜையும், சர்வ அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. விழாவையொட்டி கட்டிக்குளத்தில் இருந்து திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலைக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மாயாண்டி சுவாமி, மாயாண்டி சுவாமி ஜீவசமாதியில் உள்ள விநாயகரை வழிபட்டனர். குருபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் அறங்காவலர் தட்சணாமூர்த்தி செய்து இருந்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்