பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி உள்ள மாணிக்கவாசகர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள், வார வழிபாட்டு குழுவினர் கலந்துகொண்டு திருவாசகம், திருக்கோவையார், திருப்பள்ளி எழுச்சி உள்பட மாணிக்கவாசகரின் திருமுறைகளை பாராயணம் செய்து வழிபாடு நடத்தினர்.