தமிழக செய்திகள்

குட்கா முறைகேடு புகார்: கிடங்குகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய மனு - சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி

குட்கா முறைகேடு புகாரில் கிடங்குகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய மனுவை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக தனது கிடங்கிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி சுமந்த் என்பவர் சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிடங்குகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதே சமயம் சி.பி.ஐ. தரப்பில் குட்கா முறைகேடு புகாரில் பிழை திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்றும், மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ. தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கெண்ட நீதிபதி, விசாரணை மே 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக குட்கா முறைகேடு வழக்கில் 2022-ல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் தமிழக காவல்துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தவும் ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை