தமிழக செய்திகள்

செஞ்சி அருகே சொகுசு பஸ்சில் ரூ.2½ லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

செஞ்சி அருகே சொகுசு பஸ்சில் ரூ.2½ லட்சம் குட்கா கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா.

தினத்தந்தி

செஞ்சி, 

செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லாண்பிள்ளை பெற்றால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கடலாடி குளம் கூட்டுரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நேற்று அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு சொகுசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 மூட்டைகளில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பஸ் டிரைவர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த மூர்த்தி (வயது 60), கிளீனர் அரூர் வேப்பம்பட்டி முனுசாமி (47) ஆகியோரை கைது செய்ததுடன், பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை