தமிழக செய்திகள்

ஆர்.கே.பேட்டை அருகே ரூ.2 லட்சம் குட்கா கடத்தல்; 5 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே ரூ.2 லட்சம் குட்கா கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணிபேட்டை மாவட்டத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ராணிபேட்டை மாவட்டத்தில் இருந்து 36 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையத்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 36 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணையில், அவர்கள் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஜெயவேலு (வயது 45), மற்றொருவர் திருத்தணி பொந்தல கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (26) என்பது தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்களது நண்பர்களான குட்கா மொத்த வியாபாரிகளான ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பிரகாசம் (31), வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (30), ராணிபேட்டை மாவட்டம் பானாவரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் (47) ஆகியோரை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை