தமிழக செய்திகள்

குட்கா விவகாரத்தில் மாநில அரசையோ- காவல் துறையையோ நீதிமன்றம் குற்றம் சாட்டவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

குட்கா விவகாரத்தில் மாநில அரசையோ- காவல் துறையையோ நீதிமன்றம் குற்றம் சாட்டவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #GutkhaScam

தினத்தந்தி

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றுதான் திமுக கேட்டது . சிபிஐ விசாரணை நடத்தினாலும் மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.

குட்கா விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை. குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்