சென்னை,
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளையொட்டி, டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை 3 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதனிடையே கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஆய்வு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.