தமிழக செய்திகள்

‘டான்செட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!!

டான்செட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட்' தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வுக்கு மொத்தம் 36 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டான்செட் தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதில் எம்.பி.ஏ. படிப்புக்கு 21 ஆயிரத்து 557 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 8 ஆயிரத்து 391 பேரும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு 6 ஆயிரத்து 762 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மே 14, 15 தேதிகளில் நடைபெற உள்ள டான்செட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் மே 31-ந் தேதி வரை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது