தமிழக செய்திகள்

நிலத்தை அளவீடு செய்யாததால் பாதியில் நிறுத்தம்:சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பாப்பு

உப்புக்கோட்டையில் நிலத்தை அளவீடு செய்யாததால் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

தினத்தந்தி

உப்புக்கோட்டையில், குச்சனூர் செல்லும் சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து புதிதாக சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.

அப்போது அருகே உள்ள சிலர் தங்களது நிலத்தை அளவீடு செய்த பிறகுதான் சாலை அமைக்க வேண்டும் என்றனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்து பணம் கட்டினர். ஆனால் தற்போது வரை சர்வேயர் வந்து அளவீடு செய்யவில்லை இதனால் கால்வாய் கட்டும் பணி நிறைவு பெறாமல் அதில் கழிவுநீர் தேங்கி நின்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை