தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

மோகனூர்

மோகனூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மோகனூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். தாலுகா குழு உதவி தலைவர்கள் தேவகுமார், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரியும், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பணி தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தாசில்தார் மணிகண்டனிடம், அவர்கள் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா குழு உதவி செயலாளர்கள் ஆரோக்கிய லாரன்ஸ், பாப்பாத்தி உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு