தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது

தினத்தந்தி

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறை சார்பில் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து காது கேட்கும் கருவி, மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம், மாத உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடனுதவி கேட்டு 16 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், மன்னார்குடி தனி தாசில்தார் குணசீலி, கூத்தாநல்லூர் தனி தாசில்தார் மலைமகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு