தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி மேல தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக செல்வம் மனைவியை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். செல்வத்தின் மனைவி காமாட்சி அம்மாப்பேட்டை அருகே உள்ள புத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். செல்வம் கடந்த 1 வாரமாக வீட்டிற்கு வரவில்லை.

நேற்று புளியக்குடி சிறுவேணிகாடு பகுதியில் சிலர் ஆடு மேய்ப்பதற்காக சென்றனர். அப்போது செல்வம் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.