தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஓச்சேரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

ஓச்சேரி அடுத்த நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள பிராமணர் தெருவில் வசித்துவந்தவர் முனுசாமி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் படுக்கை அறையிலிருந்து முனுசாமி வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி சென்று பார்த்தபோது முனுசாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...