தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூசி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தூசி

வெம்பாக்கம் தாலுகா, தூசி அருகே உள்ள மாத்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 37), விவசாய கூலி தொழிலாளி.

இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், நீரிழிவு நோயாலும் நாகப்பன் மனவேதனையில் இருந்தார்.

இதனால் இன்று காலை ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்