தமிழக செய்திகள்

சுதந்திர தின வாழ்த்து: அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திர தின விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வீர சரித்திரங்களை நினைவு கூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாகவும் நிறைவேற்றி வருகிறார்கள்.

நம் பாரதப்பிரதமர் அவர்களின் முயற்சியால் நம் நாடு சுய சார்பு பாரதமாகவும் மாறியுள்ளது. அந்நியர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றதை போன்று கொரோனாவிலிருந்து விடுதலை பெறுவோம். அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு