தமிழக செய்திகள்

'9 ஆண்டுகளாக கருப்பு பணத்தை மீட்கவில்லையா?' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கருப்பு பணத்தை மீட்கவில்லையா? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரதமர் மோடி ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என்று ஒப்பீடு அடிப்படையில் கூறினார் என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, "கருப்பு பணத்தை மீட்டுவிடுவோம் என்று சொன்னார்கள். 9 ஆண்டுகளாக இன்னும் கருப்பு பணத்தை மீட்கவில்லையா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தது எதற்காக? அடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப பெறப்போவதாக சொல்கிறார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்" என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து