தமிழக செய்திகள்

நடைபயிற்சியின் போது நடந்த சுவாரஸ்யம்: கலகத் தலைவன் பார்த்தீர்களா? - அமைச்சரிடம் கேட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்...! தீயாய் பரவும் வீடியோ

நடை பயிற்சியின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கலகத் தலைவன் திரைப்படம் பார்த்தீர்களா? எப்படி உள்ளது? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை,

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் திரையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதன் பிரிவியூ ஷோவை பார்த்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உதயநிதி உட்பட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். இதுவரை நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கண்ணே கலைமானே, மனிதன், நெஞ்சுக்கு நீதி, சைக்கோ, என வரிசையாக சமூக அக்கறை மிகுந்த கதைக்களத்தையே தேர்வு செய்து வருகிறார். இப்போதும் கூட மாமன்னன் திரைப்படத்தை அவ்வாறு தேர்வு செய்து தான் அதில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சென்னையில் வானம் மேகமூட்டமாக இருப்பதால் ஊட்டி போல குளிர்ந்த சூழல் நிலவி வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.

நடைபயிற்சியின் போது, உதயநிதியின் கலகத் தலைவன் படம் குறித்து இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். அப்போது கலகத் தலைவன் பார்த்தீர்களா? எப்படி உள்ளது? என அமைச்சரிடம் முதல்-அமைசர் மு.க. ஸ்டாலின் கேட்டார். அதற்கு முதல் நாளே திரைப்படத்தை பார்த்ததாகவும், நல்லா வந்திருப்பதாகவும் அமைச்சர் பதில் அளித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்