தமிழக செய்திகள்

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்... சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 24). பெயிண்டர். இவர் தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது சக தொழிலாளியின் 15 வயது மகளிடம் பழகி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அருள்ராஜை கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்