தமிழக செய்திகள்

பெண்ணை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் சத்தியமோகன் (வயது 37). வியாபாரி.இவருக்கும் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் கரிசல்குளம் பகுதியில் செட் அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேச்சியம்மாளை, சத்தியமோகன் கட்டையால் அடித்து கொன்றார். தாங்கள் வசித்த செட்டுக்கு உள்ளேயே குழி தோண்டி புதைத்து தலையை மட்டும் வெளியே தெரியும்படி வைத்தார். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பகவதியம்மாள் விசாரித்து சத்திய மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து