தமிழக செய்திகள்

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும்.

இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று, கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு