தமிழக செய்திகள்

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

திருச்சி,

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் 14 பேர் கோவேக்சின் தடுப்பூசியும், 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும், பல இடங்களில் தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் முன் உதாரணமாக இருக்கும் வகையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்