தமிழக செய்திகள்

பலத்த மழை

கீழ்வேளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

தினத்தந்தி

நாகை, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளான தேவூர் இருக்கை, ராதாமங்கலம், வெண்மணி, பட்டமங்கலம், இலுப்பூர் சத்திரம், வடக்காலத்தூர், கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி, சிகார், ஆந்தக்குடி, காக்கழனி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் ஆகிய பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது