சென்னை,
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக அடையாறு ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையை ஒட்டியுள்ள பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.