தமிழக செய்திகள்

அடுத்த 6 மணிநேரம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 6 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை முதல் வடதமிழகம் வரை நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திர கடலோர பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையொட்டி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு