தமிழக செய்திகள்

கனமழை எதிரொலி : தமிழகத்தில் எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை எதிரிலியாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது