தமிழக செய்திகள்

இடி-மின்னலுடன் பலத்த மழை

சோளிங்கரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சோளிங்கர், எரும்பி, கல்பட்டு, சோமசமுத்திரம், மோட்டூர், கொண்டபாளையம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதந் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை விநாயகர் கோவில், போர்டின் பேட்டை, அர்ஜுன ரெட்டி தெரு, மார்க்கெட் தெரு, குட்டை தெரு, லிங்காரெட்டி தெரு, செங்குந்தர் ஒத்தவாடை தெரு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாட்டி குளம் பகுதியில் உள்ள கால்வாய் வழியாக அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள ஓடை கால்வாயில் சென்றடையும். பாட்டி குளம் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் மழைநீரும், கழிவு நீரும் கலந்து முருகா ரெட்டி தெருவில் முழங்கால் அளவுக்கு தேங்கியது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மழைநீரில் கழிவுநீர் கலந்ததால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசியது. நகராட்சி நிர்வாகம் முறையான மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு