தமிழக செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை; ‘இரவு முழுவதும் மழை பெய்யும்’ - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது. மாலையில் மழை தீவிரம் காட்ட தொடங்கியது. மழை காரணமாக பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆழமாக செல்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில் வியாழன் இரவு (இன்று) முழுவதும் மழை நின்று பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் அவருடைய பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஓ.எம்.ஆர். மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் நல்ல மழை தொடங்கிவிட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்கிறது. ஒருபுறம் வட சென்னையில் இருந்து நகரும் மேகங்கள், மற்றொருபுறம் மேற்குகில் இருந்து நகரும் மேகம் காரணமாக நேற்று இரவுபோல் லேசான மழையாக இல்லாமல், இரவு முழுவதும் மழை நின்று பெய்யும் என கூறிஉள்ளார்.

2015 டிசம்பருக்கு பின்னர் அதிகமான மழை பெய்கிறது, கடந்த 2 மணி நேரங்களில் அதிகமான இடங்கள் 100 மில்லி மீட்டர் மழையை பெற்று உள்ளது. கனமழை அடுத்த ஒரு மணி நேரங்களுக்கு தொடர்ந்து பெய்யும். சென்னையில் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் மழை பெய்வது நிற்காது, மேகங்கள் கவர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது, மழை தொடர்ந்து பெய்யும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்