தமிழக செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்துள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும். மேலும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் படி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

அதிகமாக முத்துப்பேட்டையில் 10 செ.மீ மழையும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்