தமிழக செய்திகள்

நாகையில் 3 நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழை - விவசாயிகள், மீனவர்கள் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாகை,

நாகை மாவட்டத்தில் 3 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வாஞ்சூர், திட்டச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதே போல் நாகை மாவட்டம் திருமருகல், திருக்கண்ணபுரம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. மேலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், வயல்களில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை நீக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க 2 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான ஃபைபர் படகு மீனவர்களும் 3-வது நாளாக இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது