ஸ்ரீநகர்,
காஷ்மீரில் கடந்த 23-ந் தேதி புதிதாக பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் 270 கி.மீ. நீளம் கொண்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, பனியால் மூடியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதேபோல, விமான நிலையத்திலும் பனி நிரம்பியுள்ளது.
இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. "ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக, பெரும்பாலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.