டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாதன் கலந்து கொண்டு வைரஸ் காய்ச்சல் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் சித்த மருத்துவ பணியாளர்கள் ரேவதி, தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.