தமிழக செய்திகள்

ஹே சந்திரயான்..! நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற - கவிஞர் வைரமுத்து டுவீட்

லூனா நொறுங்கியது ரஷியாவின் தோல்வியல்ல, விஞ்ஞானத் தோல்வி என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' நாளை (புதன்கிழமை) நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இதை நேரலையாக ஒளிபரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான். நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம். லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல; விஞ்ஞானத் தோல்வி. சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி. ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற" என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்