தமிழக செய்திகள்

ரூ.12 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்குகள்

பாளையங்கோட்டையில் ரூ.12 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்குகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 32-வது வார்டில் புதுப்பேட்டை தெரு, காரியநாயனார் தெரு, இலந்தகுளம் பகுதிகளில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நடந்தது. 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயர்கோபுர மின்விளக்குகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.