தமிழக செய்திகள்

மதுரவாயல்-வாலாஜா சாலை சீரமைப்பு ஐகோர்ட்டில் நெடுஞ்சாலைத்துறை தகவல்

மதுரவாயல்-வாலாஜா சாலை சீரமைப்பு ஐகோர்ட்டில் நெடுஞ்சாலைத்துறை தகவல்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காதது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. குண்டும், குழியுமாக உள்ள இந்த நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அங்கு 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மதுரவாயல்-வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டது என்றார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்