சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணி முதல் ஒட்டாணம் இடையே தரமற்ற சாலை அமைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தரமற்ற சாலை அமைத்த அலுவலர்களான உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி, தரக்கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் நவநீத் ஆகியோரை தற்கால பணிநீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகரியாக உத்தரவிட்டுள்ளது. இந்த பணியை செய்த ஒப்பந்ததாரரின் பதிவையும் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.