தமிழக செய்திகள்

தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் அச்சங்குன்றத்தில் பள்ளி மாணவர்களிடையே மதமாற்றத்தை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு பள்ளி அமைக்க கோரியும் இந்து முன்னணி சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், கோட்ட செயலாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சங்கரன்கோவில் நகரத் தலைவர் செல்வம், பொருளாளர் விஜய் பாலாஜி உள்ளிட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்